தும்மல், ஏப்பம், விக்கல் ஏன் வருகிறது தெரியுமா?


சில சமயங்களில் தூசு இல்லாமல் தும்மல் வருவது, உணவருந்தாமல் ஏப்பம் வருவது, மற்றும் விக்கல் போன்றவை வருவது ஏன் என்று பலருக்கு தெரிவதில்லை. இப்போது இவை எதனால் வருகிறது என்பதை பார்க்கலாம்.

தும்மல் என்பது மனிதனின் சுவாசம் சம்மந்தப்பட்டது மட்டுமில்லாமல், இதயம் மற்றும் மூளை பகுதிகளில் தேங்கும் கனமான சூடான காற்றாகும். இது குளிர்ச்சி அடையும் போது அல்லது தூண்டிவிடப்படும் போது மிக வேகமாக உந்தப்படும். ஏறத்தாழ நொடிக்கு 152 அடி வேகத்தில் தும்மல் உந்தப்படும் போது வெளியேறுகிறது. திடீரென வரும் தும்மல் காரணமாக மரணமடைந்தவர்களும் இருக்கிறார்கள்.

ஏப்பம் என்பது இரைப்பையிலும், சிறு குடல்களிலும் உற்பத்தியாகும் வாயுவின் தேக்கமே ஆகும். இந்த வாயுவின் வெளிபாடு தான் ஏப்பம். சில சமயங்களில் நாம் பேசிக்கொண்டே உண்ணும் போது உணவோடு சேர்த்து காற்றையும் விழுங்கிவிடுவோம். இதனால் தான் உண்ணும் போது அவசரப்படாமல், பேசாமலும், நன்கு மென்று உண்ண வேண்டும் என கூறுகிறார்கள். 

விக்கல் வருவதற்கு காரணம் ஒருவரது இரத்தத்தில் கரியமிலவாயு குறைவாக இருப்பது தான் என உடல் கூறு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த கரியமிலவாயுவை நிறைவு செய்துவிட்டால் விக்கல் வருவது நின்று விடும். நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றில் கரியமிலவாயு இருக்கிறது. இதனால் தான், சிறிது நேரம் மூச்சை அடக்கி பிறகு அதை பிளாஸ்டிக் கவரில் வெளிவிட்டு, மீண்டும் அதையே சுவாசித்தால் விக்கல் நின்று விடும் என சிலர் கூறுகிறார்கள்.

This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.